விராட் கோலியின் சாதனையை முறியடித்த கே.எல் ராகுல்
டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 6 ஆயிரம் ஓட்டங்களை கடந்தவர்களில், விராட் கோலியின் சாதனையை கேஎல் ராகுல் முறியடித்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடி வரும் விராட் கோலி, ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் 184 இன்னிங்சில் 6 ஆயிரம் ஓட்டங்களை கடந்தார்.
நேற்று நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணித்தலைவர் கேஎல் ராகுல் 30 ஓட்டங்கள் எடுத்தார், இதன் மூலம் கோலியின் சாதனையை ராகுல் முறியடித்துள்ளார்.
184 இன்னிங்சில் கோலி 6 ஆயிரம் ஓட்டங்கள் கடந்த நிலையில், ராகுல் 179 இன்னிங்சிலேயே 6 ஆயிரம் ஓட்டங்களை கடந்துள்ளார்.
இந்த சாதனைப் பட்டியலில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல் (162 இன்னிங்ஸ்) முதல் இடத்திலும், பாகிஸ்தானின் பாபர் அசாம் (165 இன்னிங்ஸ்) இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
சர்வதேச டி20 போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்த இந்திய வீரர்களில் விராட்கோலி 3296 ஓட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
2-வது இடத்தில் ரோகித் சர்மாவும் (3313), 3-வது இடத்தில் கேஎல் ராகுலும் (1831) உள்ளனர்.