சரவெடியாய் வெடித்த கே.எல்.ராகுல்! அதிரடியில் மிரட்டிய தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக் 14 பந்துகளில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 20 ஓட்டங்கள் விளாசியுள்ளார்
அவுஸ்திரேலிய அணியின் கேன் வில்லியம்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணி வீரர்கள் கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் அரைசதம் விளாசியுள்ளனர்.
பிரிஸ்பேனின் கப்பா மைதானத்தில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் பயிற்சி ஆட்டத்தில் மோதி வருகின்றன.
முதலில் துடுப்பாட்டம் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் அதிரடியில் மிரட்டினார். அவர் 33 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 57 ஓட்டங்கள் விளாசினார்.
பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் ருத்ர தாண்டவம் ஆடினார். அவர் 33 பந்துகளில் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 50 ஓட்டங்கள் விளாசினார்.
Twitter (@ICC)
Twitter (@ICC)
கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக் 14 பந்துகளில் 20 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 186 ஓட்டங்கள் குவித்தது.
ICC Cricket