சதமடித்த கே.எல்.ராகுலுக்கு விருதுடன் 24 லட்சம் அபராதம்! காரணம் இதுதான்
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் கே.எல்.ராகுலுக்கு 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணித்தலைவர் கே.எல்.ராகுல், நேற்று நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசினார். அவர் 62 பந்துகளில் 4 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 103 ஓட்டங்கள் எடுத்தார்.
இதன் மூலம் போட்டி முடிந்ததும் ஐபிஎல்லின் பல விருதுகளை பெற்றார். ஆனால் அவரது தலைமையிலான லக்னோ அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், கே.எல்.ராகுலுக்கு 24 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இது இரண்டாவது முறை என்பதால் அணியின் உள்ள மற்ற வீரர்களுக்கு 6 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இதே தவறை மீண்டும் அந்த அணி செய்தால், அணித்தலைவருக்கு 100 சதவீதம் அபராதம் மற்றும் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும். அதே போல் மற்ற வீரர்களுக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.