கே.எல்.ராகுல் மீது ஐசிசி நடவடிக்கை! எதற்காக.. ஓவல் மைதானத்தில் என்ன நடந்தது?
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆட்டமிழந்த பிறகு நடுவர்கள் முடிவு மீது அதிருப்தி வெளிப்படுத்தியதற்காக இந்திய தொடக்க ஆட்டக்காரருக்கு கே.எல்.ராகுலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஓவல் மைதானத்தில் மூன்றாம் நாள் முதல் session-ல் இச்சம்பவம் நடந்தது.
46 ரன்களில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச்சில் ராகுல் வெளியேற்றப்பட்டார்.
முன்னதாக கள நடுவர் நாட்-அவுட் என கூறிய பிறகு, இங்கிலாந்து வீரர்கள் ரிவ்யூ கேட்டனர், வீடியோ மூலம் ஆய்வு செய்த 3வது நடுவர் அவுட் என அறிவித்தார்.
ஆனால், கே.எல்.ராகுல் பந்து தனது பேடில் பட்டது என நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டவாறு மைதானத்தை விட்டு வெளியேறினார்.
இச்செயலின் மூலம், சர்வதேச போட்டியின் போது நடுவரின் முடிவில் கருத்து வேறுபாடு காட்டுவது தொடர்பாக, வீரர்கள் மற்றும் பயிற்சியாளர், மருத்துவர்கள் போன்ற வீரர் ஆதரவு நபர்களுக்கான ஐசிசி நடத்தை விதி 2.8-ஐ ராகுல் மீறியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்காக அவரது போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
24 மாத காலப்பகுதியில் ராகுலின் முதல் குற்றம் இது என்பதால், ஒரு டிமெரிட் புள்ளியும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
Indian opener KL Rahul has been fined for breaching the ICC Code of Conduct during the fourth #ENGvIND Test at The Oval.
— ICC (@ICC) September 5, 2021
More details ?https://t.co/HdfgWfkIHQ
கள நடுவர்கள் Alex Wharf மற்றும் Richard Illingworth, மூன்றாவது நடுவர் Michael Gough மற்றும் போட்டி நடுவர் Chris Broad ஆகியோர் இந்த முடிவை எடுத்தனர்.
அதிகாரிகளால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ராகுல் ஏற்றுக்கொண்டார், எனவே, முறையான விசாரணை தேவையில்லை என ஐசிசி தெரிவித்துள்ளது.