ராகுலுக்கு மிகப்பெரிய தொகை அபராதம்! காரணம் இதுதான்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணித்தலைவர் கேஎல் ராகுலுக்கு ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று மும்பையில் நடந்தது. இந்த போட்டியில் பெங்களூரு அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் லக்னோ அணி வீரர் மார்க்ஸ் ஸ்டோய்னிஸ் ஆட்டமிழந்தபோது கோபத்தில் கத்தினார். அதனைத் தொடர்ந்து போட்டி முடிந்ததும், ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக அவர் கண்டிக்கப்பட்டார்.
அதேபோல் லக்னோ அணித்தலைவர் கேஎல் ராகுலும் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டார். தனது லெவல்1 குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்துவீசியதாக லக்னோ அணி கண்டிக்கப்பட்டது. அதற்காகவே அணித்தலைவர் ராகுலுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டிக் கட்டணத்தில் இருந்து விதிக்கப்பட்ட 20 சதவீதம் அபராதத்தொகை என்பது 12 லட்சம் ரூபாய் ஆகும்.