டி20யில் அதிவேகமாக 7000 ஓட்டங்கள்! கோலியின் இமாலய சாதனையை முறியடித்த கேப்டன்
லக்னோ டைட்டன்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 7000 ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
136 ஓட்டங்கள் இலக்கு
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணி, குஜராத் அணியின் நிர்ணயித்த 136 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ஆடி வருகிறது.
இந்தப் போட்டியில் லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் அரைசதம் விளாசியுள்ளார். முன்னதாக அவர் 14 ஓட்டங்களை எட்டியபோது விராட் கோலியின் இமாலய சாதனையை முறியடித்தார்.
??'? ??? ?? pic.twitter.com/RlZzbBEqUJ
— Lucknow Super Giants (@LucknowIPL) April 22, 2023
அதிவேகமாக 7000 ஓட்டங்கள்
அதாவது, டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 7000 ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். கோலி 212 இன்னிங்சில் இந்த சாதனையை படைத்த நிலையில், கே.எல்.ராகுல் 197 இன்னிங்ஸ்களில் முறியடித்துள்ளார்.
Fastest ?? to ?? ? pic.twitter.com/62V3sVDCY5
— Lucknow Super Giants (@LucknowIPL) April 22, 2023
ஐபிஎல் கிரிக்கெட்டில் 116 போட்டிகளில் ராகுல் 4141 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் 4 சதங்கள் மற்றும் 33 அரைசதங்கள் அடங்கும்.
@IPL