காயத்தால் அவதிப்படும் கே.எல்.ராகுல்..ஜேர்மனிக்கு பயணம்
இந்திய கிரிக்கெட் அணி வீரர் கே.எல்.ராகுல் சிகிச்சைக்காக ஜேர்மனி செல்ல உள்ளார்.
கே.எல்.ராகுல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
ஆனால் காயம் காரணமாக அவர் தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக இந்திய அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் கே.எல்.ராகுல் ஜேர்மனிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அவருக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால், மேல் சிகிச்சைக்காக அவர் இந்த பயணத்தை மேற்கொள்ள உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சிகிச்சைக்கு பிறகு அவருக்கு ஓய்வு தேவை என்பதால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான எஞ்சிய போட்டிகளில் அவர் விளையாட மாட்டார்.
மேலும், ஓய்வு முடிந்து திரும்பிய பின்னர் தேசிய கிரிக்கெட் அகாதமியில் ராகுல் தனது உடல்தகுதியை நிரூபிக்க வேண்டும். இதன் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்தும் அவர் முழுவதுமாக விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.