கோபத்தில் சூர்யகுமார் யாதவை திட்டிய கேஎல் ராகுல்! வைரலாகும் ரன் அவுட் வீடியோ
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் கே.எல்.ராகுல் 1 ரன்னில் அரைசதத்தை தவறவிட்ட வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணி மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தெரிவு செய்ததால், தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும், ரிஷப் பந்தும் களமிறங்கினர்.
ரோஹித் சர்மா 5 ரன்கள், ரிஷப் பந்த் 18 ரன்கள், விராட் கோலி 18 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது.
அடுத்ததாக சூர்யகுமார் யாதவ் மற்றும் கே.எல்.ராகுல் ஜோடி நிதானமாக விளையாடி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
போட்டியின் 30-வது ஓவரில் கே.எல்.ராகுல் அடித்த பந்து பவுண்டரி லைனுக்கு அருகில் சென்றது.
அதை தடுத்த ஹூசைன் பந்தை தூக்கி விக்கெட் கீப்பரை நோக்கி எறிந்தார். அப்போது கே.எல்.ராகுல் 2-வது ரன் ஓடும் போது திடீரென்று பாதியில் நின்று, மீண்டும் ஓடுவதற்குள் ரன் அவுட் ஆகிவிட்டார்.
இதனால் கோபமடைந்த கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவை திட்டிவிட்டு முறைத்து கொண்டே பெவிலியன் திரும்பினார், இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
— jennifer (@jennife74834570) February 9, 2022