பரிசாக கிடைத்த ஸ்மார்ட்போனை பெண் ஊழியருக்கு வழங்கிய கே.எல். ராகுல்
KL Rahul's gift smartphone to female staff member: தனக்கு பரிசாக கிடைத்த ஸ்மார்ட்போனை பெண் ஊழியருக்கு வழங்கிய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுலின் செயல் வைரலாகி வருகிறது.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இந்த தொடரின் இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்ற நிலையில், மழை காரணமாக டிஎல்எஸ் விதிமுறைப்படி இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
Big player. Bigger heart 💙 🎥 An act of kindness and pure 𝙆𝙇𝙖𝙨𝙨 🙌 #TeamIndia | #NZvIND | @klrahul https://t.co/BgT005WZlp
— BCCI (@BCCI) November 8, 2026
இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய கேஎல் ராகுலுக்கு Game Changer Of The Match விருது வழங்கப்பட்டது, இதன்போது அவருக்கு ஸ்மார்ட்போன் பரிசளிக்கப்பட்டது.
இதனை பெற்றுக்கொண்ட ராகுல், அந்தத் திடலில் வேலை பார்க்கும் பெண் ஊழியர் ஒருவருக்கு வழங்கினார்.
இச்சம்பவத்தின் வீடியோ காட்சிகளை பிசிசிஐ வெளியிட வைரலாகி வருகிறது, பலரும் ராகுலின் மனதை பாராட்டி கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
