சதம் விளாசிய கே.எல்.ராகுல், சுப்மன் கில் - முதல் நாளில் 368 ஓட்டங்கள் குவித்த இந்தியா
இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி, ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
நியூ சண்டிகரில் உள்ள முலான்பூரில் இன்று தொடங்கிய டெஸ்ட் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி, முதலில் துடுப்பாட்டத்தை தொடங்கியது.
கே.எல்.ராகுல், சுப்மன் கில் சதம்
முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 3 விக்கெட்களை இழந்து 368 ஓட்டங்களை குவித்தது.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 24 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சாய் சுதர்சன் அரை சதம் விளாசி 81 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் ஆடி வந்த கே.எல்.ராகுல் தனது 12வது டெஸ்ட் சதத்தை விளாசிவிட்டு அடுத்த பந்திலே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அணித்தலைவர் சுப்மன் கில் சதத்துடனும்(103), விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் அரை சதத்துடனும்(50) ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இது சுப்மன் கில்லின் 12வது சதமாகும்.

மேலும், இது ரிஷப் பந்த்தின் 50வது டெஸ்ட் போட்டி ஆகும். இதன் மூலம், தோனி, சையத் கிர்மானிக்கு அடுத்தபடியாக 50 டெஸ்ட்களில் விளையாடியுள்ள 3வது இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை ரிஷப் பந்த் பெற்றுள்ளார்.
ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது சலீம் 2 விக்கெட்களும், ஜியாவுர் ரஹ்மான் ஒரு விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |