ஐபிஎல் 2021! இதுவரை நடந்து முடிந்த போட்டிகளில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் யார் தெரியுமா?
ஐபிஎல் 2021ல் இதுவரை நடைபெற்ற போட்டிகள் அடிப்படையில் அதிக சிக்சர்கள் வீசிய வீரர்களின் விபரங்கள் தெரியவந்துள்ளது.
அதன்படி இப்பட்டியலில் பஞ்சாப் கிங்ஸின் கே எல் ராகுல் 13 போட்டிகளில் விளையாடி 30 சிக்சர்கள் மற்றும் 48 பவுண்டரிகளை விளாசி முதலிடத்தில் உள்ளார்.
இரண்டாமிடத்தில் பெங்களூர் ராயல் சேலர்ஞ்சர்ஸின் க்ளென் மேக்ஸ்வெல் உள்ளார். அவர் 14 போட்டிகளை விளையாடிய நிலையில் 21 சிக்சர்கள் மற்றும் 47 பவுண்டரிகளை அடித்துள்ளார்.
மூன்றாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸின் ருத்துராஜ் கெய்க்வார்ட் உள்ளார், அவர் 14 போட்டிகளில் விளையாடிய நிலையில் 20 சிக்சர்களையும், 56 பவுண்டரிகளையும் விளாசியுள்ளார்.
இப்பட்டியலில் மற்றொரு சென்னை வீரர் டூ பிளிஸிஸ் 20 சிக்சர்கள், 53 பவுண்டரிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளார்.