இதுதான் என் வாழ்க்கையையே புரட்டிப்போட்டது! 2011ல் நடந்த முக்கிய தருணத்தை பகிர்ந்த கே.எல்.ராகுல்
இந்திய நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல் தனது வாழ்க்கையையே மாற்றிய தருணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வரும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியில் ராகுல் தற்போது இடம்பெற்றுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராகுலின் பேட்டியின் 20 வினாடி காட்சியை பகிர்ந்துள்ளது.
அதில் ராகுல் தனது லட்சியம் என்ன என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
பேட்டியில் பேசிய ராகுல், வளரும் பருவத்தில், 2011 உலகக் கோப்பையை நான் வீட்டில் பார்த்தேன், அப்போதுதான் நாம் உலகக் கோப்பையை வென்றோம், அந்த தருணம் தான் என் வாழ்க்கையை மாற்றியது.
அன்று முதல், நான் இதைத்தான் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தேன்.
எனது நாட்டிற்காக உலகக் கோப்பை வெல்ல வேண்டும் என முடிவு செய்தேன், ஒரு முறையோ, இரண்டு முறையோ அல்லது முன்று முறையோ என்னால் முடிந்த வரை நாட்டிற்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும்.
உலகக் கோப்பை அணியின் ஒரு அங்கமாக இருந்த வரலாறு படைக்க வேண்டும் என்பதே எனது லட்சியம் என ராகுல் தெரிவித்துள்ளார்.