100வது போட்டியில் நூறு.. ருத்ர தாண்டவம் ஆடிய ராகுல்!
தனது 100வது ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணித்தலைவர் கேஎல் ராகுல் சதமடித்து அசத்தியுள்ளார்.
ஐபிஎல்லில் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணி பீல்டிங்ஐ தெரிவு செய்தது.
அதன்படி லக்னோ அணியில் கேஎல் ராகுல், டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இன்றைய போட்டி கேஎல் ராகுலுக்கு 100வது ஐபிஎல் போட்டியாகும்.
தொடக்கம் முதலே அதிரடி காட்டிய ராகுல் சிக்ஸர், பவுண்டரிகள் என அடித்து நொறுக்கினார். 56வது பந்தில் சதம் அடித்து மிரட்டினார். இதில் 5 சிக்ஸர், 9 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல் கிரிக்கெட்டில் இது அவருக்கு 3வது சதம் ஆகும்.
ராகுலின் அதிரடியால் லக்னோ அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ஓட்டங்கள் குவித்தது. கேஎல் ராகுல் 60 பந்துகளில் 103 ஓட்டங்கள் எடுத்து களத்தில் இருந்தார்.
ஐபிஎல்லில் இதுவரை ராகுல் 3508 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 2 சதம், 28 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 132 ஓட்டங்கள் விளாசியுள்ளார்.