கே.எல் ராகுலுக்கு பதிலாக ரிஷப் பண்ட் கேப்டன்! பிசிசிஐ அறிவிப்பு
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் கே.எல் ராகுலுக்கு பதிலாக ரிஷப் பண்ட் செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை தொடங்குகிறது.
இந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் கே.எல் ராகுல் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோர் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
Photo Credit: PTI
மேலும், கே.எல் ராகுலுக்கு பதிலாக ரிஷப் பண்ட் கேப்டனாகவும், ஹர்திக் பாண்ட்யா துணை கேப்டனாகவும் செயல்படுவார்கள் என இந்திய மூத்த தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி சிறப்பாக செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Photo Credit: PTI