அவுட் இல்லாததற்கு அவுட் கொடுத்த நடுவர்? கடும் கோபத்துடன் வெளியேறிய ராகுல்: வைரலாகும் வீடியோ
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், கே.எல்.ராகுல் அவுட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி விக்கெட் இழப்பிற்கு ரோகித்-கே.எல்.ராகுல் ஜோடி 43 ஓட்டங்கள் எடுத்திருந்தது,
இந்நிலையில், இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை துவங்கிய இந்திய அணிக்கு இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இருவரும் அரைசதத்தை நெருங்கி ஆடிக் கொண்டிருந்த போது, கே.எல்.ராகுல் 46 ஓட்டங்கள் எடுத்த நிலையில், ஆண்டர்சன் பந்து வீச்சில், விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவ்விடம் கேட்ச் ஆனார்.
Finally, England have breakthrough as KL Rahul dismisses from James Anderson from a thicker edge and caught behind by Johnny Bairstow.#ENGvIND | #IndvsEng | #IND | #England |#KLRahul | #Video | #Anderson |
— T20 World Cup 2021 (@T20WorldCup21) September 4, 2021
pic.twitter.com/49E2PAFHsA
அப்போது நடுவர் அவுட் இல்லை என்று கூற, உடனே இங்கிலாந்து அணி ரிவ்யூவுக்கு சென்றது. அப்போது பந்தானது பேட்டில் பட்டது போன்று, UltraEdge-ல் தெரிந்தது. இதனால் மூன்றாவது நடுவர் அவுட் கொடுக்க, கள நடுவரும் அவுட் கொடுத்தார்.
Is @klrahul11 wicket a mystery ?#ENGvIND #sonysportsindia pic.twitter.com/WakWtA2W07
— Yash (@Yashderasariya) September 4, 2021
ஆனால் ராகுலோ இது அவுட் இல்லை, பேட் கால்காப்பில் தான் பட்டது என்று கடும் கோபத்துடனே மைதானத்தை விட்டு வெளியேறினார். அதே போன்று இந்திய ரசிகர்களும் இது எப்படி அவுட் ஆகும்? என்று அவர் அவுட்டானது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்.
I think there was a huge misunderstanding with KL Rahul's caught behind. The original decesion was not out. I clearly heard Michael Gough(Third Umpire) saying 'You can stay with your original decesion'. But the umpire overturned his decision to out! ?#IndvsEng pic.twitter.com/PxLLaOMhDT
— Varun Bhat (@varunbhatkt) September 4, 2021