ரோகித் சர்மாவுக்கு பதிலாக அணியில் முக்கிய பொறுப்பேற்கும் இளம் வீரர்! கசிந்த தகவல்
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் துணை கேப்டன் பொறுப்பேற்கவிருக்கும் வீரரின் விவரம் கசிந்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ளது.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ம் திகதி Centurion மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.
காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய ரோகித் சர்மா, பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடாமியில் பயிற்சி பெற்று வருகிறார்.
இந்நிலையில், ரோகித் விளையாடததால், அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ வட்டாரம் உறுதிப்படுத்தியுள்ளது.
பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடாமியில் பயிற்சி பெற்று வரும் ரோகித் சர்மா, தென் ஆப்பிரிக்கா உடனான ஒரு நாள் தொடரில் விளையாடுவாரா என கேள்வி எழுந்துள்ளது.