சதம் விளாசிய கே.எல் ராகுல்; மேற்கிந்திய தீவுகளுக்கு 352 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா
kl rahul ton leads india scores 351 vs west indies: கே.எல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மாவின் அபார ஆட்டத்தால் இந்தியா, மேற்கிந்திய தீவுகளுக்கு 352 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.
சதம் விளாசிய கே.எல் ராகுல்
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி, பஞ்சாபில் இன்று நடைபெற்று வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி, முதலில் துடுப்பாட்டம் ஆட தொடங்கியது.

ரோஹித் சர்மா அதிரடியாக ஆட, மறுபுறம் சுப்மன் கில் 1 ஓட்டத்திலும், விராட் கோலி முதல் பந்திலே ஓட்டம் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.
தொடர்ந்து ஆடிய ரோஹித் சர்மா 85 பந்துகளில், 10பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட 92 ஓட்டங்கள் குவித்தார்.

அதைத்தொடர்ந்து, அரைசதம் விளாசிய ருதுராஜ் கெய்க்வாட் 57 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் விக்கெட் கீப்பரான கே.எல்.ராகுல் அதிரடியாக ஆடி 87 பந்துகளில், 10 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உட்பட 129 ஓட்டங்கள் குவித்தார்.

இது கே.எல்.ராகுலின் 9வது சர்வதேச ODI சதம் ஆகும். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ஓட்டங்களை கடந்துள்ளார்.
இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 351 ஓட்டங்கள் குவித்தது.
352 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி விளையாடி வருகிறது.