படுதோல்வி.. 3வது டெஸ்ட் முடிந்த உடனே கே.எல்.ராகுல் செய்த செயல்! வைரலாகும் புகைப்படம்
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
1-0 என இந்திய முன்னிலையில் உள்ள நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 25ம் தேதி HEADINGLEY மைதானத்தில் தொடங்கியது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 78 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 432 ஓட்டங்கள் குவித்தது.
357 ரன்கள் பின்தங்கிய நிலைியல் 3வது நாள் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்நதது, கே.எல்.ராகுல் 8 ஓட்டங்கள் வெளியேறினார்.
எனினும், 3வது நாள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்திருந்தது புஜாரா (91), கோலி (45) களத்தில் இருந்தனர்.
நான்காவது ஆட்டம் தொடங்கிய சில மணிநேரங்களில் மளமளவென விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி படுதோல்வியடைந்தது.
2வது டெஸ்டில் சதம் விளாசிய கே.எல்.ராகுல், 3வது டெஸ்டில் பட்டையை கிளப்புவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் முதல் இன்னிங்கஸில் டக் அவுட், 2வது இன்னிங்ஸில் 8 ரன்களுடன் நடையை கட்டினார்.
இந்நிலையில், 3வது டெஸ்ட் போட்டி முடிந்த உடனே கே.எல்.ராகுல் headingley மைதானத்தில் வலைபயிற்சியில் ஈடுபட்டார்.
குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் அடுத்த போட்டியில் சதம் விளாச வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளனர்.