வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒரு நாள் போட்டியிலிருந்து கே.எல்.ராகுல் விலகல்! என்ன காரணம்?
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் கே.எல்.ராகுல் விளையாடாததற்கான காரணம் தெரியவந்துள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி பிப்ரவரி 11ம் திகதி அகமதாபாத் மைதானத்தில் பகல்-இரவு போட்டியாக நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில், இந்திய வீரர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான போதிலும் ஒரு நாள் தொடரை நடத்தும் பணிகள் தொடர்ந்து மும்முரமாக நடந்து வருகிறது.
அதேசமயம், துணை கேப்டன் கே.எல்.ராகுல் இன்னும் இந்திய அணியில் சேரவில்லை, மேலும் தனது சகோதரியின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக, அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்கமாட்டார்.
அவர் பிப்ரவரி 6 ஆம் திகதி இந்தியாவின் பயோ-பப்பில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் மீதமுள்ள 2 ஒரு நாள் போட்டிகளில் அவர் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.