சிக்ஸர் பறந்த பந்தை தாவி பிடித்து உள்ளே தூக்கி எறிந்த கே.எல்.ராகுல்! வாயடைத்து போன பேட்ஸ்மேன் வீடியோ
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல் செய்த அற்புதமான பீல்டிங் வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி, அகமதாபாத்தில் உள்ள, நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 124 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆக, அடுத்து ஆடிய இங்கிலாந்து 15.3 ஓவரிலே 130 ஓட்டங்கள் குவித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இப்போட்டியில், இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாடிய போது, துவக்க வீரர் ஜோஸ் பட்லர், அக்ஷர் பட்டேல் வீசிய 4.1-வது ஓவரை எதிர் கொண்டார்.
Kl Rahul classy fielding ?❤️ pic.twitter.com/WKhurF3c7c
— Swapnil Srivastava (@swapni__sri) March 12, 2021
அப்போது பட்லர் பந்தை சிக்ஸருக்கு தூக்கி விளாச, அங்கு பீல்டிங் நின்று கொண்டிருந்த கே.எல்.ராகுல் தன்னுடைய அற்புதமான பீல்டிங் மூலம், அந்த சிக்ஸரைத் தடுத்தார்.
இதைக் கண்ட பட்லர் ஒரு நிமிடம் வாயடைத்து போக, இந்திய ரசிகர்கள் கே.எல்.ராகுல் பீல்டிங்கை பாராட்டி எழுந்து நின்று கை தட்டினர்.