நான் உடனடியாக மன்னிப்பு கேட்டேன்! சதம் விளாசி இங்கிலாந்து தோல்விக்கு காரணமான வீரர்
தென் ஆப்பிரிக்க துடுப்பாட்ட வீரரான ஹென்ரிச் கிளாசென் எதிரணி வீரரிடம் மன்னிப்பு கேட்டதாக தெரிவித்துள்ளார்.
கிளாசென் ருத்ர தாண்டவம்
மும்பையில் நடந்த உலககக்கோப்பை ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை 229 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியது.
AFP
ஹென்ரிச் கிளாசென் 67 பந்துகளில் 4 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 109 ஓட்டங்கள் விளாசினார். அவர் சதம் விளாசியபோது இங்கிலாந்து பந்துவீச்சாளர் மார்க் வுட் அருகில் சென்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஆனால் மார்க் வுட் இதனால் ஈர்க்கப்படவில்லை.
இந்த நிலையில் மார்க் வுட் முன் கத்தியபடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டதாக கிளாசென் தெரிவித்துள்ளார்.
மன்னிப்பு கேட்ட கிளாசென்
இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'நான் அவரிடம் எதுவும் கூறவில்லை. விளையாட்டு முடிந்த உடனேயே நான் சென்று மன்னிப்பு கேட்டேன். அவர் என்னை இரண்டு முறை காலில் அடித்தார், அது கொஞ்சம் வலிக்கிறது. ஆனால் அது வெறும் உணர்ச்சி தான். நான் இங்கிலாந்து வீரர்களுக்காகவும், அவருக்காகவும் வருந்துகிறேன், ஆனால் அது தூய்மையான உணர்ச்சியாகும்.
சில சமயங்களில் அதைக் கட்டுப்படுத்துவது கடினம். ஆனால் நான் உடனடியாக மன்னிப்பு கேட்டு, ஆட்டம் முடிந்ததும் அவரிடம் பேசினேன், என் தரப்பில் இருந்து எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புகிறேன்' என தெரிவித்துள்ளார்.
AP
இதுகுறித்து கருத்து தெரிவித்த இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர், 'ஹென்ரிச் கிளாசெனின் கொண்டாட்டம் முற்றிலும் உணர்ச்சிப்பூர்வமானது. அவருடன் எந்த வெறுப்பும் இல்லை. ஏனெனில் அவர் தனது தவறை உணர்ந்து உடனடியாக மன்னிப்பு கேட்டார்' என கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |