13 சிக்ஸர்களுடன் 174 ஓட்டங்கள் விளாசிய வீரர்! வாணவேடிக்கை காட்டி 416 ஸ்கோர் குவித்த தென் ஆப்பிரிக்கா
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 416 ஓட்டங்கள் குவித்தது.
வான் டெர் டசன் அரைசதம்
சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் தொடங்கிய 4வது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா முதலில் துடுப்பாடியது. ஹென்ரிக்ஸ் 28 ஓட்டங்களிலும், டி காக் 45 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
Twitter (@ProteasMenCSA)
அடுத்து களமிறங்கிய கேப்டன் மார்க்ரம் 8 ஓட்டங்களில் நேசர் பந்துவீச்சில் அவுட் ஆனார். அதன் பின்னர் களமிறங்கிய வான் டெர் டசன் அதிரடியாக 65 பந்துகளில் 62 ஓட்டங்கள் எடுத்தார்.
ருத்ர தாண்டவமாடிய கிளாசென்
ஐந்தாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய கிளாசென் அவுஸ்திரேலிய பந்துவீச்சை துவம்சம் செய்தார். சிக்ஸர்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டிய அவர் 83 பந்துகளில் 174 ஓட்டங்கள் குவித்தார். இதில் 13 சிக்ஸர், 13 பவுண்டரிகள் அடங்கும்.
AP Photo
அவருடன் கைகோர்த்த டேவிட் மில்லர் 45 பந்துகளில் 5 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 82 ஓட்டங்கள் விளாசினார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவரில் 416 ஓட்டங்கள் குவித்தது.
AFP/Getty Images
அவுஸ்திரேலிய அணியின் தரப்பில் ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளும், ஸ்டோய்னிஸ், நேசர் மற்றும் எல்லிஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |