சதம் அடித்து வரலாறு படைத்த கே.எல்.ராகுல்.., தென் ஆப்பிரிக்க மண்ணில் மீண்டும் ஒரு சாதனை
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த கே.எல்.ராகுல் வரலாறு படைத்து சாதனை புரிந்துள்ளார்.
சதம் அடித்த கே.எல்.ராகுல்
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் நகரில் நேற்று துவங்கியது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பௌலிங்கை தேர்வு செய்தது. பின்னர், களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் போராடி 245 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதில், தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி சார்பில் சிறப்பான ஆட்டத்தை கொடுத்த கே.எல்.ராகுல் 14 பவுண்டரி 4 சிக்சருடன் சதமடித்து 101 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க மண்ணில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை கே.எல்.ராகுல் பெற்றார்.
முதல் வெளிநாட்டு பேட்ஸ்மேன்
முன்னதாக, கடந்த 2021 -ம் ஆண்டு இதே மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 123 ரன்கள் எடுத்து 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற கே.எல்.ராகுல் முக்கிய பங்காற்றினார்.
அதே போல இந்த டெஸ்ட் போட்டியிலும் சதம் அடித்ததால் தென் ஆப்பிரிக்காவில் உள்ள சென்சூரியன் மைதானத்தில் 2 சதங்கள் அடித்த முதல் வெளிநாட்டு பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
Centurion at Centurion once again! ?#KLRahul, TAKE A BOW!#TeamIndia's new keeper-batter rises to the occasion & brings up a memorable ton under tough circumstances.
— Star Sports (@StarSportsIndia) December 27, 2023
His success mantra - Always #Believe!
Tune in to #SAvIND 1st Test
LIVE NOW | Star Sports Network pic.twitter.com/tYoDZNNJsV
இதற்கு முன்பு, சென்சூரியன் கிரிக்கெட் மைதானத்தில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் போன்ற வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் அனைவரும் அதிகபட்சமாக தலா 1 டெஸ்ட் சதம் மட்டுமே எடுத்துள்ளனர். ஆனால், 2 சதம் அடித்த முதல் வெளிநாட்டு வீரராக கேஎல் ராகுல் சாதனை படைத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |