லார்ட்ஸில் சதமடித்த கே.எல்.ராகுலுக்கு கொடுக்கப்பட்ட கவுரம்! பலகையில் எழுதப்பட்ட பெயர்: வெளிய்டான வீடியோ
இங்கிலாந்து அணிக்கெதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த கே.எல்.ராகுலின் பெயர் அங்கிருக்கும் பலகையில் எழுதப்படும் வீடியோ காட்சியை பிசிசிஐ தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று துவங்கியது.
அதன் படி டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்ய, இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக ரோகித்சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் களமிறங்கினர்.
ரோகித்சர்மா ஆரம்பத்தில் இருந்தே, இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை அடித்து ஆட துவங்கினார். அதன் படி ஆட்டத்தின் 15-வது ஓவரை வீசிய சாம்கரன் பந்து வீச்சில், அவர் நான்கு பவுண்டரிகளை பறக்கவிட்டார்.
இவருக்கு துணையாக கே.எல்.ராகுலும் சிறப்பான ஆட்டத்தை கொடுத்ததால், இந்திய அணி விக்கெட் இழப்பின்றி நூறு ஓட்டங்களை தொட்டது. தொடர்ந்து அடித்து ஆடி வந்த ரோகித்சர்மா 145 பந்தில் 83 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
அதன் பின் ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்ட கே.எல்.ராகுல் சிறப்பான ஆட்டத்தை கொடுத்தார். ஆனால், மறுமுனையில் வந்த சட்டீஸ்வர் புஜாரா 9 ஓட்டங்களில் வெளியேற, அடுத்து வந்த அணியின் தலைவர் கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்த ராகுல் சிறப்பான ஆட்டத்தை கொடுத்தார்.
அரைசதத்தை கோஹ்லி நெருங்கிய போது, 42 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஓலி ராபின்சன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இருப்பினும் தனி ஒருவனாக சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுல் சதம் அடித்து மிரட்டினார்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 276 ஓட்டங்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 127 ஓட்டங்களுடனும், ரஹானே 1 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
? Scenes as @klrahul11 returns to the dressing room after his brilliant 1⃣2⃣7⃣* on Day 1 of the Lord's Test. ? ?#TeamIndia #ENGvIND pic.twitter.com/vY8dN3lU0y
— BCCI (@BCCI) August 13, 2021
இப்போட்டியில் சதம் அடித்த கே.எல்.ராகுலின் பெயர் லார்ட்ஸில் இருக்கும் பலையில் எழுதப்பட்டது. இதை பிசிசிஐ தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.