கே.எல்.ராகுல் ரன் அவுட் சர்ச்சைக்கு கிடைத்த விடை! பாகிஸ்தான் போட்டியில் நடந்தது இது தான்
பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் கே.எல்.ராகுலின் ரன் அவுட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது.
உலகக்கோப்பை டி20 தொடரின் சூப்பர் 12 ஆட்டத்தில், கடந்த 24-ஆம் திகதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
இந்நிலையில், இப்போட்டியில் துவக்க வீரரான கே.எல்.ராகுல், ஆட்டத்தின் 2.1-வது ஓவரை வீசிய வேகப்பந்து வீச்சாளர் Shaheen Afridi பந்து வீச்சில் கிளீன் போல்டாகி வெளியேறினார்.
அசுர வேகத்தில் வந்த பந்தை கே.எல்.ராகுல் கணிப்பதற்குள் பந்தானது போல்டில் பட்டுவிட்டது. இதனால் ராகுல் என்ன செய்வது என்று தெரியாமலே மைதானத்தை விட்டு அப்படியே வெளியேறினார்.
Shaheen Afridi is on FIRE ?
— Malik Ali Raza (@MalikAliiRaza) October 24, 2021
KL Rahul is sent packing after an absolute beauty from the left-arm seamer.
© @ICC #INDvPAK #T20WorldCup2021 pic.twitter.com/VpehYbyPRf
ஆனால், கே.எல்.ராகுல் அவுட் ஆன பந்து ஒரு நோ பால், இதை நடுவர் கவனிக்க தவறிவிட்டார், தூங்கிவிட்டார் என்று கூறி, ரசிகர்கள் அதன் வீடியோ மற்றும் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் , இது குறித்து தற்போது விளக்கம் கிடைத்துள்ளது. அதாவது அந்த ஓவரின் முதல் பந்தை டெலிவரி செய்த பிறகு தான் ஷாஹீன் அப்ரிடியின் கால் வெளியே வந்துள்ளது.
THIS TYPE OF UMPIRING NOT ACCEPTABLE IN THIS TYPE OF CRUCIAL MATCH.. THIS WAS THE BALL WHEN KLRAHUL GOT OUT#klrahul #indvspak pic.twitter.com/XQvp8e2mcD
— Kl Rahul (@rahulkl_stans) October 24, 2021
வேகப்பந்து வீச்சாளர்கள் எப்போதும் வேகமாக ஓடிவந்து பவுலிங் செய்யும்போது பந்தினை டெலிவரி செய்துவிட்டு இவ்வாறு கிரீஸை விட்டு வெளியேறுவது வழக்கம் தான். அதன்படி கே.எல்.ராகுல் அவுட் ஆன பந்து, ரிலீஸ் செய்த பிறகு தான் அவர் கிரீஸ் லைனை விட்டு வெளியேறியுள்ளார்.
ஆனால் அதனை வீடியோவில் Pause செய்து புகைப்படமாக எடுத்து ரசிகர்கள் வைரலாக்கி உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.