வடக்கு லண்டனில் கத்திச்சண்டையிட்ட இளைஞர்கள்! பீதியடைந்த பயணிகள் (வீடியோ)
பிரித்தானியாவின் வடக்கு லண்டனில் ரயில் நிலையத்தில், இளைஞர்கள் கத்தியை வைத்து சண்டையிட்டது பயணிகளை பீதியடைய செய்தது.
கத்தியுடன் தாக்குதல்
வடக்கு லண்டனில் உள்ள குயின்ஸ்பரி குழாய் நிலையத்தின் நடைமேடையில், மாலை 5.30 மணியளவில் சிலர் சண்டையிட்டுக் கொண்டனர்.
இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் கருப்பு ஜாக்கெட் மற்றும் சாம்பல் நிற தொப்பி அணிந்த ஒரு இளைஞர், ஒரு கத்தியுடன் தாக்குதல் நடத்துகிறார்.
மேலும் கருப்பு நிற உடையணிந்த ஒரு சிறுவன், ஒரு சிறிய கத்தியை ஏந்தியிருப்பதை தற்செயலாக தவறவிடுகிறார்.
ஐந்து இளைஞர்கள் இந்த சண்டையில் ஈடுபட்டிருந்தனர், ஆனால் இருவர் மட்டும் கத்தி ஆயுதத்துடன் இருந்தனர்.
பின்னர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர், அதிகாரிகளில் ஒருவர் கமெராவுக்கு வெளியே 'பொலிஸ்-நிறுத்து!' என்று கத்துவது காணொளியில் கேட்கிறது.
பீதியடையச் செய்த நிகழ்வு
அதைத் தொடர்ந்து சண்டையிட்ட நபர்களில் ஒருவர் தனது கத்தியை, தனது டிராக்சூட் கால்சட்டையில் இடுப்புப் பட்டையில் திணித்து மறைக்க முயன்றார்.
இந்த நிகழ்வு அங்கிருந்த பயணிகளை பீதியடையச் செய்தது. மேலும் இந்த காணொளி இணையத்தில் பகிரப்பட்டது.
பிரித்தானிய பொலிஸார் சண்டையில் ஈடுபட்ட பதின்ம வயது இளைஞரை கைது செய்ததாக தெரிவித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |