மது போதையில் வாக்குவாதம்... இரத்தவெள்ளத்தில் சுருண்டு விழுந்த நபர்: வெளியான தீர்ப்பு
சுவிட்சர்லாந்தில் மதுபான விடுதியில் நடந்த வாக்குவாதம் கொலையில் முடிந்த நிலையில், இது திட்டமிட்ட சம்பவமாக இருக்கலாம் என கருதி நீதிமன்றம் 9 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்துள்ளது.
நவம்பர் 2017ல் லூசர்ன் மாநிலத்தில் மதுபான விடுதி ஒன்றில் இருவர் வாக்குவாதத்தில் ஏற்பட, குறித்த சம்பவம் கொலையில் முடிந்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நபருக்கு ஒன்பது ஆண்டுகள் மற்றும் 14 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
36 வயதான செர்பிய நாட்டவர் சம்பவத்தன்று மதுபான விடுதி ஒன்றில், இரவு விடுதியை மூட அங்குள்ள ஊழியருக்கு உதவி செய்துள்ளார். அப்போது மது அருந்தியபடி இருந்த எரித்திரியா நாட்டவர், விடுதியில் இருந்து வெளியேற முடியாது என மறுத்துள்ளார்.
இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, இறுதியில் செர்பியா நாட்டவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த எரித்திரியா நாட்டவரின் கழுத்தில் வெட்டியுள்ளார்.
இதில் ரத்தவெள்ளத்தில் சுருண்டு விழுந்த அந்த எரித்திரியா நாட்டவர், சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளார். இதனையடுத்து அந்த செர்பிய நாட்டவர் அங்கிருந்து மாயமாகியுள்ளார். ஆனால் அடுத்த 24 மணி நேரத்தில் பொலிசார் அந்த நபரை கைது செய்தனர்.
இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிவுக்கு வந்ததையடுத்து, ஆயுதமற்ற நிலையில் ஒருவரை சண்டைக்கு அழைத்ததுடன், அவரை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளது திட்டமிட்ட செயல் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து செர்பியருக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.