ஜேர்மனியில் பொலிசாரை நோக்கி கத்தியுடன் பாய்ந்த நபர்: அதிர்ச்சியை உருவாக்கிய சம்பவம்
ஜேர்மனியில், பொலிசாரை நோக்கி கத்தியுடன் பாய்ந்த ஒருவரை பொலிசார் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் ஒன்று நேற்று நிகழ்ந்தது.
பொலிசாரை நோக்கி கத்தியுடன் பாய்ந்த நபர்
ஜேர்மனியின் பவேரியா மாகாணத்திலுள்ள Lauf an der Pegnitz நகரில், பொலிசாரை நோக்கி கத்தியுடன் பாய்ந்த ஒருவரை பொலிசார் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்கள்.
Aktuell größerer #Polizei #Einsatz am Bahnhof #Lauf (links der Pegnitz). Wir sind mit zahlreichen Kräften vor Ort. Bitte meidet den Bereich. Es besteht KEINE Gefahr für die Bevölkerung. Wir berichten hier weiter.#LAU3006 pic.twitter.com/yntEG4OMsh
— Polizei Mittelfranken (@PolizeiMFR) June 30, 2024
நேற்று ஞாயிற்றுக்கிழமை, பொலிஸ் கார் ஒன்றை திடீரென ஒருவர் தாக்கியுள்ளார்.
பொலிசார் காரை விட்டு இறங்கவே, அவர் கத்தியுடன் பொலிசாரை நோக்கி ஓடிவந்ததாகவும், அவரை பொலிசாரில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதாகவும் பொலிஸ் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Image: Daniel Lob/dpa/picture alliance
பொலிசார் துப்பாக்கியால் சுட்டதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அவர் யார், அவரது தாக்குதலில் நோக்கம் என்ன என்பது தெரியாத நிலையில், பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Image: Daniel Lob/dpa/picture alliance
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |