தொங்கிய ரயில் பயணியின் தலை... பட்டாக்கத்தியுடன் கைதான நபர்: லண்டன் சுரங்க ரயிலில் நடுக்கும் சம்பவம்
லண்டனில் சுரங்க ரயிலில் பட்டாக்கத்தி நபரால் தாக்கப்பட்ட பயணி ஒருவரின் தலை பாதி தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பட்டாக்கத்தியால் கொடூர தாக்குதலில் ஈடுபட்ட நபரை ஆயுதம் ஏந்திய பொலிசார் கைது செய்துள்ளனர். மத்திய லண்டனில் உள்ள கிரீன் பார்க் பகுதியில் வைத்தே, பொலிசார் அந்த நபரை கைது செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
கிரீன் பார்க் மற்றும் பாண்ட் ஸ்ட்ரீட் இடையே ரயில் பயணிக்கும் போது இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. திடீரென்று ஒருவர் பட்டாக் கத்தியுடன் பயணிகளை மிரட்டியதுடன், பயணிகள் மீது கத்தியை வீசியுள்ளார்.
இதனால் பயணிகள் மொத்தம் அலறியதுடன், உயிருக்கு பயந்து அடுத்த பெட்டிக்கு தப்பிச்செல்ல முயன்றத்தில் கூட்ட நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பயணி ஒருவர் அந்த பட்டாக்கத்தி நபரிடம் சிக்கிக்கொள்ள, அந்த நபர் கத்தியால் தாக்கியுள்ளார். இதில் அவரது கழுத்தில் வெட்டுபட்டு, தலை பாதி தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
ஆனால் இந்த களேபரங்கள் எதுவும் ரயில் சாரதிக்கு தெரியப்படுத்த முடியவில்லை எனவும், 10 நிமிடங்களுக்கு பிறகே தகவல் தெரிவிக்கப்பட்டு, பின்னர் ஆயுதம் ஏந்திய பொலிசாரால் தாக்குதல் முன்னெடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்த அந்த ரயில் பயணி தற்போது மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு, சிகிச்சையில் உள்ளார் என பிரித்தானிய போக்குவரத்து பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் பாதி தலை தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட அந்த பயணி தொடர்பில் மேலதிக தகவல்களை வெளியிட பொலிசார் மறுத்துள்ளனர்.