பிரித்தானிய மகாராணியின் மறைவு.. கோஹினூர் வைரம் யாருக்கு செல்லும்? வெளியான தகவல்
இந்தியா உட்பட நான்கு நாடுகள் உரிமை கொண்டாடும் கோஹினூர் வைரம் கமிலா வசம் செல்கிறது
விலை மதிப்பற்ற வைர கற்களை கொண்ட கிரீடத்தில் 105.6 காரட் கோஹினூர் வைரம் பொருத்தப்பட்டுள்ளது
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவால், கோஹினூர் வைர கிரீடம் கமிலா வசம் செல்லும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது 96வது வயதில் பிரித்தானிய மகாராணி எலிசபெத் மறைந்தது உலகளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவால் இளவரசர் சார்லஸ் மன்னராகியுள்ளார்.
அதேபோல் அவரது மனைவி கமிலா ராணியாக முடிசூடியுள்ளார். இதனைத் தொடர்ந்து ராணி எலிசபெத் வசம் இருந்த பாரம்பரிய கோஹினூர் வைர கிரீடம் கமிலா வசம் செல்லும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த கிரீடத்தில் விலை மதிப்பற்ற 2 ஆயிரத்து 800 வைர கற்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
PC: ANDREW MILLIGAN/POOL/GETTY
1937ஆம் ஆண்டு ஆறாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்காக, கோஹினூர் வைரத்தை கொண்ட பிளாட்டினம் கிரீடம் ராணி எலிசபெத்திற்காக செய்யப்பட்டது.
முதன் முதலில் இந்த வைரம் விக்டோரியா மகாராணிக்கு வழங்கப்பட்டது. இதில் உள்ள கோஹினூர் வைரம் 105.6 காரட் ஆகும். பாரம்பரிய பொக்கிஷமாக பார்க்கப்படும் இது, பதினான்காம் நூற்றாண்டில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
PC: CHRIS JACKSON/GETTY IMAGES