முடிசூட்டுவிழாவில் சர்ச்சைக்குரிய கோஹினூர் வைரம் பயன்படுத்தப்படாது: பக்கிங்காம் அரண்மனை தகவல்...
சர்ச்சைக்குரிய கோஹினூர் வைரம் முடிசூட்டுவிழாவில் பயன்படுத்தப்படாது என பக்கிங்காம் அரண்மனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய கோஹினூர் வைரம்
ஒருபக்கம், கோஹினூர் வைரம் இந்தியாவுக்குச் சொந்தமானது என இந்தியா நீண்டகாலமாக கூறிவருகிறது. மறுபக்கமோ, அந்த வைரத்தை அணியும் ஆண்களுக்கு பிரச்சினை ஏற்படும், ஆகவே, பெண்கள் மட்டுமே அதை அணியமுடியும் என்ற ஒரு கருத்தும் நிலவிவருகிறது.
பிரித்தானிய மகாராணி முதலாம் எலிசபெத்தின் முடிசூட்டுவிழாவின்போது, அவர் இந்த கோஹினூர் வைரம் பதிக்கப்பட்ட கிரீடத்தை அணிந்திருந்தார்.
image -TIM GRAHAM
நாட்டை ஆள்பவர்கள் அந்த வைரம் பதிக்கப்பட்ட கிரீடத்தை சூடி முடிசூடுவது வழக்கம் என்றாலும், ஆண்களுக்கு அதனால் பிரச்சினை ஏற்படலாம் என்ற கருத்து நிலவுவதால், அதை மன்னர் சார்லஸ் அணிய வாய்ப்பில்லை.
மன்னரின் முடிசூட்டுவிழாவின்போதே, ராணி கமீலாவும் முடிசூட்டப்படப்போகிறார். அதனால், அவர் கோஹினூர் வைரம் பதிக்கப்பட்ட கிரீடத்தை அணியக்கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், அதை கமீலா அணியப்போவதில்லை, அதற்கு பதிலாக, ராணி மேரியின் கிரீடத்தை அணியப்போகிறார் என்று, பக்கிங்காம் அரண்மனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
image - REUTERS
image - REUTERS/HIS MAJESTY KING CHARLES