ODI போட்டிகளில் கோலி ஓய்வு? -17 வருட கிரிக்கெட் வாழ்வில் மோசமான சாதனை
விராட் கோலி தனது 17 வருட கிரிக்கெட் வாழ்வில் மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
கோலி படைத்த மோசமான சாதனை
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் துடுப்பாட்டம் ஆட தொடங்கிய நிலையில், அணித்தலைவர் சுப்மன் கில் 9 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி, 4 பந்துகள் ஆடி ஓட்டங்கள் எடுக்காமல் டக்அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார்.
VIRAT KOHLI GONE FOR HIS SECOND DUCK OF THE SERIES!#AUSvIND | #PlayoftheDay | @BKTtires pic.twitter.com/jqIdvMeX9T
— cricket.com.au (@cricketcomau) October 23, 2025
முன்னதாக கடந்த 19 ஆம் திகதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியிலும் 8 பந்துகள் ஆடி, ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.
விராட் கோலியின் 17 வருட கிரிக்கெட் வாழ்க்கையில், ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 2 போட்டிகளில் டக் அவுட் ஆவது இதுவே முதல் முறையாகும்.
304 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி, இதுவரை 18 முறை டக் அவுட் ஆகியுள்ளார். இந்திய தரப்பில், சச்சின் 20 முறையும், ஜவகல் ஸ்ரீநாத் 19 முறையும் டக் அவுட் ஆகி முன்னணியில் உள்ளனர்.
ODI போட்டிகளில் ஓய்வா?
36 வயதான விராட் கோலி ஏற்கனேவே T20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்து விட்டார்.
8 மாதங்களுக்கு முன்னர் சர்வதேச போட்டிகளில் விளையாடிய அவர், அதன் பிறகு ஐபிஎல் போட்டிகளில் விளையாடியதால் பயிற்சி எதுவும் இல்லாமல், அவுஸ்திரேலியா தொடரில் விளையாடி வருகிறார்.
தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர், கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரின் போட்டி-உடற்தகுதி குறித்து கவலைகளை எழுப்பினார்.
தற்போது கோலி தொடர்ச்சியாக 2 போட்டிகளில் டக் அவுட் ஆகியுள்ளது அவர் ஓய்வு பெறுவதற்கான அழுத்தங்களை அதிகரிக்கும்.
அவுட் ஆகி ஓய்வறைக்கு செல்லும் போது ரசிகர்களை நோக்கி தனது வலது கையுறையை உயர்த்தினார். இது ஓய்வை அறிவிப்பதற்காக அறிகுறியா என சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.
ஆனால், 2027 உலகக்கோப்பையில் விளையாட கோலி விருப்பம் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |