இந்திய ஜாம்பவானின் சாதனையை முறியடித்த விராட் கோலி!
விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் 12,344 ஓட்டங்கள் குவித்துள்ளார்
சச்சின் டெண்டுல்கர் 100 சதங்கள் அடித்துள்ள நிலையில், விராட் கோலி 71 சதங்கள் அடித்துள்ளார்
இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி, முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி வீரர் விராட் கோலி 48 பந்துகளில் 63 ஓட்டங்கள் விளாசினார். இதன்மூலம் இந்திய அணியின் ஜாம்பவான் வீரர் ராகுல் டிராவிட்டின் சாதனையை கோலி முறியடித்துள்ளார்.
Getty
ஒட்டுமொத்தமாக அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். ராகுல் டிராவிட் 404 போட்டிகளில் 24,064 ஓட்டங்கள் குவித்துள்ள நிலையில், விராட் கோலி 471 போட்டிகளில் 24,078 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் சச்சின் டெண்டுல்கர் 664 போட்டிகளில் 34,357 ஓட்டங்கள் குவித்து முதல் இடத்தில் உள்ளார்.
அதிக ஓட்டங்கள் குவித்த இந்திய அணி வீரர்கள் பட்டியல்:
- சச்சின் டெண்டுல்கர் - 34,357 (664)
- விராட் கோலி - 24,078 (471)
- ராகுல் டிராவிட் - 24,064 (404)
- சவுரவ் கங்குலி - 18,433 (421)
-
எம்.எஸ்.தோனி - 17,092 (535)