விரக்தியில் சிரித்த கோலி.. மனமுடைந்த ரசிகர்கள்! வீடியோ
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், முதல் பந்திலேயே ஆட்டமிழந்ததால் விரக்தியில் சிரித்த கோலியை பார்த்த ரசிகர்கள் மனமுடைந்த நிகழ்வு நடந்தது.
பெங்களூரு-ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது.
மோசமான பார்மில் இருக்கும் கோலி இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற எதிர்ப்பார்ப்பிற்கு மத்தியில் கோலி களமிறங்கினார்.
ஆனால் அவர் சந்தித்த முதல் பந்திலேயே சுசித் ஒவேரில் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனால் மிகுந்த விரக்தியுடன் சென்ற அவர், பெவலியனில் அமர்ந்திருக்கும்போது அவுட் ஆனதை நினைத்து வேதனையில் சிரித்தார்.
— ChaiBiscuit (@Biscuit8Chai) May 8, 2022
அதனை திரையில் பார்த்த அவரது ரசிகர்கள் மனமுடைந்தனர். மேலும் சமூக வலைத்தளங்களில் இது குறித்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்த சீசனில் கோலி Golden duck ஆவது இது மூன்றாவது முறையாகும்.