ருதுராஜ் முதல் சதம்! விராட் கோஹ்லி 84வது சதம் விளாசல்..அதிர்ந்த மைதானம்
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், விராட் கோஹ்லி தனது 53வது சதத்தை பதிவு செய்தார்.
ரோஹித், ஜெய்ஸ்வால் சொதப்பல்
ராய்ப்பூரில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நடந்து வருகிறது. 
நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தெரிவு செய்ய, இந்தியா துடுப்பாட்டத்தை தொடங்கியது.
ரோஹித் ஷர்மா 14 (8) ஓட்டங்களிலும், ஜெய்ஸ்வால் 22 (38) ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க விராட் கோஹ்லி, ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி கூட்டணி அமைத்தனர்.
கோஹ்லி, ருதுராஜ் மிரட்டல்
இவர்களின் ஆட்டத்தின் மூலம் இந்திய அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
இருவரில் யார் முதலில் சதம் அடிப்பார் என்ற கேள்வி நிலவிய அளவிற்கு, கோஹ்லி மற்றும் ருதுராஜ் வேகமாக ஓட்டங்களை சேர்ந்தனர். 
இந்த நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் தனது முதல் ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார். 83 பந்துகளை எதிர்கொண்ட அவர், 2 சிக்ஸர் மற்றும் 12 பவுண்டரிகளுடன் 105 ஓட்டங்கள் விளாசி அவுட் ஆனார்.
அடுத்து விராட் கோஹ்லி (Virat Kohli) தனது 53வது ஒருநாள் சதத்தை அடித்தார். சர்வதேச அளவில் அவருக்கு இது 84வது சதம் ஆகும்.
கோஹ்லி 93 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 102 ஓட்டங்கள் குவித்து இங்கிடி ஓவரில் ஆட்டமிழந்தார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |