போட்டிக்கு பின் கடுமையாக மோதிக் கொண்ட கோலி-ஜோ ரூட்? கசிந்த முக்கிய தகவல்: வைரலாகும் வீடியோ
லார்ட்சில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கோஹ்லி மற்றும் ஜோ ரூட் கடுமையான வார்த்தை போரில் ஈடுபட்டதாக தகவல் கசிந்துள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று துவங்கிய நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நடந்த சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளது.
லார்ட்சில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இருப்பினும் இரு அணி வீரர்களுக்கிடையே வார்த்தை போர் ஏற்பட்டது. குறிப்பாக இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி, ஜஸ்ப்ரிட் பும்ரா மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவியது.
இதன் காரணமாக, ஜேம்ஸ் ஆண்டர்சன் பேட்டிங் ஆட வந்த போது, பும்ரா அவரை பவுன்சரால், தொடர்ந்து தாக்கினார்.
இந்நிலையில், அப்போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் முடிந்த பிறகு, மைதானத்தில் கோஹ்லி, ஆண்டர்சன் மற்றும் ஜஸ்ப்ரிட் பும்ரா ஆகியோர் ஆக்ரோசமாக பேசிக் கொண்டனர். இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
A couple of new footages which I saw today reg Lord's test on Lord's channel.
— Kartik Jayaraman (@elitecynic) August 25, 2021
One is Anderson-Bumrah-Kohli discussion. looks like Bumrah is surprised at Anderson's response and corroborates to what Bumrah was saying while he was batting. pic.twitter.com/lJuCLMTRcy
அது அப்படியே லார்ட்சில் இருக்கும் லாங் ரூமிலும் தொடர்ந்துள்ளது. இதில் இந்தியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் என இரண்டு அணியைச் சேர்ந்தவர்களும் கடுமையான வார்த்தை போக்கை கடைபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் மற்றும் இந்திய கேப்டன் கோஹ்லி ஆகியோர் டிரஸ்ஸிங் ரூம்களுக்கு செல்லும் வழியிலும் வார்த்தை போரில் மோதிக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.