டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20! இதில் எது மிகவும் பிடிக்கும்? கோஹ்லி அளித்த பதில்
இந்திய அணியின் கேப்டன் ஆன கோஹ்லி, கிரிக்கெட்டில் தனக்கு எந்த வகை கிரிக்கெட் போட்டி மிகவும் பிடிக்கும் என்ற கேள்விக்கு பதில் கூறியுள்ளார்.
கிரிக்கெட் உலகில் தற்போது மிகப் பெரிய அளவில் பேசப்பட்டு வரும் வீரர்களில் கோஹ்லியும் ஒருவர். ஆரம்பத்தில் பேட்டிங்கில் கலக்கி வந்த இவர், தற்போது ஒரு கேப்டனாக இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.
இந்நிலையில், தற்போது இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடி கொண்டிருக்கும் கோஹ்லி, சமீபத்திய உரையாடல் ஒன்றில், தனக்கு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.
அதில், அவர் ஒரு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் சற்று ஆபத்தான நிலையில் இருந்தது. வீரர்கள் அவ்வளவு ஈடுபாட்டோடு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடதது போல் தெரிந்தது.
ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஆரம்பிக்கபட்ட உடன், டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மீண்டும் பழைய உத்வேகத்துடன் உற்சாகத்துடன் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் ஒவ்வொரு கிரிக்கெட் வீரர் மனதிலும் காணப்படுகிறது.
ஆபத்தின் விளிம்பில் இருந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் காப்பாற்றி உள்ளது. டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை எளிதில் விளையாடி விட முடியாது.
இதற்கு மனதளவிலும் உடல் அளவிலும் தயாராக இருக்க வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை, டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவது எனக்கு எப்போதும் பிடிக்கும் என்றும் இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை முடிந்த அளவுக்கு நீண்ட நாட்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும் என்கிற உத்வேகமும் உற்சாகமும் தனக்கு எப்போதும் இருக்கும் என்று கூறியுள்ளார்.