விமர்சகர்களுக்கு இதால் தான் கோலி பதிலளிப்பார்... தென் ஆப்பிரிக்காவிலும் இது நடக்கும்! பயிற்சியாளர் நம்பிக்கை
விமர்சகர்களுக்கு கோலி தனது பேட்டால் தான் பதிலளிப்பார், தென் ஆப்பிரிக்காவிலும் அது நடக்கும் என அவரின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட இருக்கிறது.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி 26ம் திகதி தொடங்கயிருக்கிறது.
இந்நிலையில் கோலி தொடர்பாக ராஜ்குமார் கூறுகையில், தென் ஆப்பரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் அடித்து அனைத்து சர்ச்சைகளுக்கும் பதிலளிக்கவே, கோலி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
அவர் எப்போதும் சர்ச்சைகளுக்கு தனது பேட்டால் தான் பதிலளித்துள்ளார், இம்முறையும் அதில் அவர் வெற்றி பெறுவார்.
கோலி, அதிக ரன்கள் அடித்தால் இந்திய அணிக்கு மிகவும் நல்லது, ஏனெனில் கோலி அதிக ரன்கள் அடிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
தென் ஆப்பிரிக்கா திறமையான பந்துவீச்சாளர்களை கொண்ட அணி, குறிப்பாக வேகப்பந்து வீச்சு அற்புதமாக இருக்கும்.
எனவே, கோலி சிறப்பாக விளையாடுவது இந்திய அணிக்கு மிக முக்கியமானது.
கோலி தென் ஆப்பிரிக்கா போட்டிக்கு தயாராகும் பாணியை பார்த்தால், அவர் பெரியளவிலான ரன்கள் அடிப்பார் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என ராஜ்குமார் சர்மா தெரிவித்துள்ளார்.