விராட் கோலி- அனுஷ்காவின் இந்த பிரம்மாண்ட வீட்டை பார்த்ததுண்டா?
இந்தியாவின் நட்சத்திர தம்பதிகளில் முக்கியமானவர்கள் விராட் கோலி- அனுஷ்கா தம்பதி.
இருவரும் 2013ம் ஆண்டு முதல் காதலித்து வந்த நிலையில், 2017ம் ஆண்டு இத்தாலியின் மிலன் நகரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு வாமிகா என்றொரு மகள் இருக்கிறார், மகளின் தனியுரிமையை பாதுகாக்கும் வகையில் அவரது புகைப்படத்தை கூட வெளியிடாமல் இருக்கின்றனர்.
இந்நிலையில் இவர்களது பங்களா குறித்த புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.
அழகான பண்ணை வீடு
மகாராஷ்டிராவின் Alibaug நகரில் இவர்களது பண்ணை வீடு அமைந்திருக்கிறது, கொரோனா ஊரடங்கின் போது கோலி- அனுஷ்கா தம்பதி இங்கு தான் வசித்தார்களாம், ஊரடங்கு காலகட்டத்தை மிக அமைதியாக கடக்க பண்ணை வீடு உதவியதாக கோலியே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
பிரம்மாண்டமான பங்களா
டெல்லியின் Gurugramவில் நீச்சல் குளம், வெளிப்புற விளையாட்டு அரங்கம் உட்பட பல வசதிகளுடன் சுமார் 80 கோடி மதிக்கத்தக்க பங்களா பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளதாம்.
35வது மாடியில் வீடு
மும்பையின் Worli நகரில் அமைந்துள்ள 35வது மாடியில் வசிக்கின்றனர் கோலி- அனுஷ்கா தம்பதியினர்.
4 படுக்கையறை வசதிகளுடன், அரேபியக் கடலை பார்த்து ரசிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது இவர்களது வீடு.