இது உங்க தோட்டம் கிடையாது! இந்திய வீரர்களை தொடர்ந்து சீண்டும் ஆண்டர்சனை மோசமாக திட்டிய கோஹ்லி.. ஸ்டம்ப் மைக்கில் பேச்சுடன் பதிவான வீடியோ
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி, ஆண்டர்சனை கடுமையான வார்த்தைகளில் திட்டிய ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
ஏற்கனவே முதலாவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் இளம் வீரரான சிராஜை வேண்டுமென்றே ஆண்டர்சன் சீண்டியிருந்தார். அதனை தொடர்ந்து இரண்டாவது போட்டியிலும் கோஹ்லியை அதே போன்று சீண்டிப் பார்த்தார்.
ஆனால் விராட் கோஹ்லியோ தனக்கே உரித்தான பாணியில் அவருக்கு ஆக்ரோஷமான பதிலடி கொடுத்தார்.
நேற்றைய போட்டியின் இரண்டாவது இன்னிங்சின் போது துவக்கத்திலேயே 2 விக்கெட்டை இழந்து நிலையில் விளையாட வந்த கோஹ்லி 17-வது ஓவரில் போது புஜாரா அடித்த பந்தில் ஒரு ரன் ஓடலாம் என்று நினைத்தார்.
ஆனால் பிட்சின் குறுக்கே ஆண்டர்சன் நடந்து சென்றதால் கடுமையான கோபம் அடைந்த கோஹ்லி இது போட்டியின் பிட்ச் ஆண்டர்சன், “உங்கள் வீட்டு தோட்டம் கிடையாது என கெட்ட வார்த்தையுடன் அவரை திட்டினார். கோஹ்லி இவ்வாறு பேசியது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியது.
what the hell wrong between kohli and anderson...
— Dileep Kumar Sharma (@Dileep1607) August 15, 2021
This could be reason of lapse of concentration for virat which eventually cast in big way...#virat #kohli #anderson #ENGvsIND #ENGvIND #jimmy #RohitSharma #pujara #LordsTest #markwood #bcci #rahane #cricket pic.twitter.com/L8kziQojNq