விராட் கோலியை விட்டுக் கொடுக்காத ரோகித் சர்மா - வைரலாகும் ஆடியோ
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் நிகழ்ந்த சம்பவம் ரசிகர்களிடயே பாராட்டைப் பெற்றுள்ளது.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் இந்திய அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடர் முடிந்து தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
பிப்ரவரி 16 ஆம் தேதி ஈடன் கார்டனில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இன்று 2வது போட்டி நடைபெறவுள்ளது.
இதனிடையே முதல் டி20 போட்டியில் இந்திய அணி பந்து வீசும்போது கேப்டன் ரோகித் சர்மாவை முன்னாள் கேப்டன் விராட் கோலி ரிவியூ எடுக்கச் சொன்ன சம்பவம் தற்போது இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது.
— Maqbool (@im_maqbool) February 16, 2022
அறிமுக வீரராக விளையாடிய ரவி பிஷ்னோய் எட்டாவது ஓவர் வீசினார். அப்போது ரோஸ்டன் சேஸின் காலில் பந்து லேசாக உரசியபடி கீப்பரிடம் சென்றது. ஆனால் அதற்கு அம்பயர் வைடு கொடுத்தார்.
பந்து காலை உரசி சென்றதன் சத்தம் கேட்ட விராட்கோலி பந்து பேட்ஸ்மேனை கடந்த சென்றபோது லேசாக சத்தம் கேட்டது. நீ ரிவ்யூ கேள் என்று ரோகித் சர்மாவிடம் கூறினார். சில நொடிகள் ரோகித்திடம் பேசிய அவர் அதில் கூறியது மைக்கில் பதிவாகியுள்ளது.இதன் பின்னர் ரோகித் சர்மாவும் ரிவியூ எடுத்தார். அந்த ரிவியூ-வில் பேட்ஸ்மேன் அவுட் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டாலும் பந்து வைடு இல்லை என அறிவிக்கப்பட்டது.
இதனைப் பார்த்த ரசிகர்கள் பதவிகள் மாறினாலும் இருவருடனான புரிதல் மாறவில்லை என கருத்து தெரிவித்துள்ளனர்.