அவுஸ்திரேலிய ஜாம்பவானின் சாதனையை நொறுக்கிய விராட் கோஹ்லி
Kohli breaks ponting record in odi of 13000 runs: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், விராட் கோஹ்லி அவுஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்தார்.
ஒருநாள் கிரிக்கெட்டில், 3வது வரிசையில் களமிறங்கி 13,000 ஓட்டங்கள் குவித்த முதல் வீரர் எனும் சாதனையை விராட் கோஹ்லி படைத்தார்.
விராட் கோஹ்லி
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் துடுப்பாட்ட வீரரான விராட் கோஹ்லி (Virat Kohli) 51 பந்துகளில் 74 ஓட்டங்கள் விளாசினார்.
இப்போட்டியில் விராட் கோஹ்லி 3வது வரிசையில் களமிறங்கி 13,000 ஓட்டங்கள் மைல்கல்லினை எட்டினார்.
இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 3வது வரிசையில் அதிக ஓட்டங்கள் எடுத்த அவுஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்கின் (12,662) சாதனையை கோஹ்லி முறியடித்தார்.

அவருக்கு அடுத்த இடத்தில் இலங்கையின் குமார் சங்ககாரா (9,747), ஜேக்கியூஸ் கல்லிஸ் (7,774), கேன் வில்லியம்ஸன் (6,504), பாபர் அஸாம் (6,054), ஜோ ரூட் (5,525) ஆகியோர் உள்ளனர்.
