பவுண்டரி விளாசிய பும்ரா.. உடை மாற்றும் அறையில் ஆக்ரோஷமாக கோஹ்லி செய்த செயல்! வைரலாகும் வீடியோ
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பும்ரா பவுண்டரி விளாசிய போது உடை மாற்றும் அறையில் இருந்த கோஹ்லி ஆக்ரோஷமாக கர்ஜித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இங்கிலாந்து-இந்தியா மோதிய முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்து நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12ம் திகதி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ராகுலின் சதத்தால் 364 ஓட்டங்கள் குவித்தது.
இதைத்தொடர்ந்து முதலில் இன்னிங்ஸில் களமிறங்கி விளையாடிய இங்கிலாந்து அணி 391 ஓட்டங்கள் எடுத்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி, 4வது நாள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ஓட்டங்ள் எடுத்திருந்தது. பந்த் 14 ஓட்டங்களுடனும், இஷாந்த் சர்மா 4 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
2வது டெஸ்டின் கடைசி நாளான இன்று இந்திய அணி தொடர்ந்து 2வது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
Heat is on, Bumrah ???. #ENGvIND pic.twitter.com/ImuEAHiHAG
— Jon | Michael | Tyrion ?? (@tyrion_jon) August 16, 2021
பந்த் 22 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார், அவரை தொடர்ந்து இஷாந்த் சர்மா 16 ஓட்டங்களில் நடையை கட்டினார்.
இனி இந்திய அணி மளமளவென சரிந்து விடும் என எதிர்பார்த்திருந்த இங்கிலாந்து வீரர்களை மிரள வைக்கும் வகையில்,93 வது ஓவரில் மார்க் வுட் வீசிய பந்தில் பும்ரா பவுண்டரி விளாசினார்.
இதை கண்ட உடை மாற்றும் அறையில் இருந்த இந்திய அணித்தலைவர் கோஹ்லி ஆக்ரோஷத்தில் கொந்தளித்து கை தட்டி பாராட்டினார்.
ஆக்ரோஷத்தில் கோஹ்லி தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாக தெரிகிறது.