என்னவொரு ஆட்டம்.. பெரிய வெற்றி.. மகிழ்ச்சியில் திளைக்கும் கோலி!
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றதில் விராட் கோலி மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்.
மும்பையின் வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.
தினேஷ் கார்த்திக் (66), மேக்ஸ்வேல் (55) ஆகியோரின் அபார ஆட்டத்தினால் பெங்களூரு 189 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் ஆடிய டெல்லி அணி 173 ஓட்டங்கள் எடுத்து தோல்வியை தழுவியது.
கோலி 12 ஓட்டங்களில் இருந்தபோது ரன்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். எனினும் அணியின் வெற்றியை அவர் களத்தில் கொண்டாடினார்.
இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்றைய போட்டியில் வெற்றி நிகழ்ந்த மகிழ்ச்சியான தருணங்களின் புகைப்படங்களை பகிர்ந்துள்ள அவர், அதனுடன் என்ன ஒரு ஆட்டம். பெரிய வெற்றி என குறிப்பிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
What a game. Top win. @RCBTweets pic.twitter.com/zXwPKvrxNa
— Virat Kohli (@imVkohli) April 16, 2022