கோலி போன் சுவிட்ச் ஆப்.. அவரை கேப்டன்சியிலிருந்து நீக்கியதற்கான காரணமென்ன? விளாசும் பயிற்சியாளர்
ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து கோலியை நீக்கியதற்கான காரணம் குறித்து அவரது இளம்வயது பயிற்சியாளர் ராஜ்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோலியின் இளம்வயது பயிற்சியாளர் ராஜ்குமார் கூறியதாவது, நான் இன்னும் விராட் கோலியிடம் பேசவில்லை. சில காரணங்களால் அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் எனது கருத்தைப் பொறுத்த வரையில், கோலி குறிப்பாக டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகியபோதே, தேர்வாளர்கள் உடனடியாக அவரை இரண்டு(டி20-ஒருநாள்) வெள்ளை பந்து வடிவங்களில் இருந்து விலகச் சொல்லியிருக்க வேண்டும், அல்லது விலக விட்டுருக்க கூடாது.
உலகக் கோப்பைக்கு முன் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று கோலியிடம் கேட்டுக் கொண்டதாக சௌரவ் கங்குலியின் கருத்துக்களை சமீபத்தில் படித்தேன்.
ஆனால், அவ்வாறு நடந்ததாக எனக்கு நினைவில்லை. கங்குலி அறிக்கை எனக்கு ஆச்சரியமளிக்கிறது. வெவ்வேறு அறிக்கைகள் பரவி வருகின்றன.
கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியதற்கான காரணத்தை தேர்வுக் குழு தெரிவிக்கவில்லை.
நிர்வாகமோ, பிசிசிஐயோ அல்லது தேர்வாளர்களோ என்ன விரும்புகிறார்கள் என்பது நமக்கு தெரியவில்லை. எந்த தெளிவும் இல்லை, வெளிப்படைத்தன்மையும் இல்லை.
கோலி கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கோலி வெற்றிகரமான ஒரு நாள் கேப்டனாக திகழ்ந்துள்ளார் என ராஜ்குமார் சர்மா கூறியுள்ளார்.