அவுட்டாகமல் இருக்க இங்கிலாந்து வீரர் செய்த கேவலமான செயல்! கண்டுபிடித்த கோஹ்லி: கமெராவில் பதிவான காட்சி
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் செய்த செயலில் வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
லண்டன் ஓவல் மைதானத்தில், இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நேற்று துவங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி, இங்கிலாந்தின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 191 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆனது.
இந்திய அணியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஷர்துல் தாகூர் 36 பந்தில் 57 ஓட்டங்கள் எடுத்து இந்திய அணியின் மானத்தை காப்பாற்றினார்.
இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆடிய இங்கிலாந்து அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 53 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது. நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் திணறினார்.
Could land in trouble for taking guard this close to the danger area ?
— SonyLIV (@SonyLIV) September 2, 2021
Kohli was not impressed, what is your take on this? ⤵️
Tune into #SonyLIV now ? https://t.co/E4Ntw2hJX5 ??#ENGvsINDonSonyLIV #ENGvIND #HaseebHameed #Moment pic.twitter.com/8MBMmqUWKw
குறிப்பாக உமேஷ் யாதவ் தன்னுடைய மின்னல் வேக பந்து வீச்சின் மூலம், இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை கதறவிட்டார்.
அதன் காரணமாக இங்கிலாந்து வீரர்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகினர்.
இதில் இருந்து தப்பிப்பதற்காக இங்கிலாந்து அணியின் துவக்க வீரரான Haseeb Hameed பேட்டிங்கின் கிரீசில் இருந்து, பந்து வீசும் கார்ட் பகுதியில், தன்னுடைய ஷு காலால் அதை மார்க் செய்வதாக கூறி சேதப்படுத்துவது போன்று செய்தார்.
ஏனெனில், இந்திய வீரர்கள் அந்த லைனில் அவ்வப்போது சிறப்பாக பந்து வீசி வந்தனர். இதைக் கண்ட கோஹ்லி உடனடியாக இது குறித்து நடுவரிடம் கூறினார். இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
பொதுவாக ஒரு பேட்ஸ்மேன் கிரிக்கெட் விதிப்படி கிரிஸில் இருந்து 1.5 மீற்றர் தொலைவுக்கு பின்னர் பந்து வீசும் மைதானத்தை((கார்ட்) ) சேதப்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது.
இருப்பினும் Haseeb Hameed 12 பந்துகள் சந்தித்து விக்கெட் எதுவும் எடுக்காமல் பும்ரா பந்து வீச்சில் டக் அவுட் ஆகி வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.