ஏமாற்றத்துடன் வெளியேறிய கோலி! அவுட் இல்லை என கொந்தளிக்கும் ரசிகர்கள்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் விராட் கோலி ஆட்டமிழந்த விதம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அவுஸ்திரேலியா 263
இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அருண் ஜெட்லீ மைதானத்தில் நடந்து வருகிறது.
அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 263 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, இந்திய அணி தற்போது முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது.
@ICC
அணியின் ஸ்கோர் 135 ஆக உயர்ந்தபோது விராட் கோலி எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். விராட் கோலியை தனது முதல் டெஸ்டில் அறிமுகமான மேத்யூ குனமென் வெளியேற்றினார். இதனால் அவர் 44 ஓட்டங்களில் பெவிலியன் திரும்பினார்.
வெடித்த சர்ச்சை
ஆனால் கோலி ஆட்டமிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, குனமென் வீசிய பந்து பாட்-களை தொடுவதற்கு முன் பேட்-ஐ தாக்கியது போல் தெரிந்தது.
மூன்றாவது நடுவர் சரிபார்த்த பின்னர், கள நடுவரின் அழைப்புக்கு விடப்பட்டது. அவர் அவுட் கொடுக்கவே கோலி வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் பேட் மற்றும் பாட்-யில் ஒரே நேரத்தில் பந்து பட்டதால் அவுட் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும் ரசிகர்கள் அது அவுட் இல்லை என்று கூறி நடுவரை கடுமையாக விளாசி வருகின்றனர்.
இதன் காரணமாக கோலி அவுட் ஆன விவகாரம் கிரிக்கெட்டில் உலகில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.