போட்டியின் போது பாலிவுட் பாட்டுக்கு காமெடியாக நடனமாடிய விராட் கோலி! வைரலாகும் வீடியோ
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது பவுண்டரி லைனுக்கு அருகில் இந்திய கேப்டன் விராட் கோலி காமெடியாக நடனமாடியது இணையத்தில் வைரலாகியுள்ளது.
நவம்பர் 3ம் திகதி அபுதாபியில் நடந்த சூப்பர் 12 சுற்று போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது.
211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்து 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ஆப்கானிஸ்தான் இன்னிங்ஸின் போது இந்திய கேப்டன் விராட் கோலி நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
பிரபலமான பாலிவுட் பாடல் இசைக்க, பவுண்டரி லைனை நோக்கி நடந்த வந்துக்கொண்டிருந்த கோலி, பாம்பு போல் செய்கை காட்டினார்.
Kohli and his dance steps are pure bliss to watch ?❤️ pic.twitter.com/1nhWlHKskT
— ⋆✰?????????✰⋆ (@TansMe_V) November 4, 2021
பின், பாடலுக்கு காமெடியாக நடனமாடினார். இந்நிகழ்வை பவுண்டரி லைனுக்கு அருகே இருந்த ரசிகர் ஒருவர் தனது போனில் விடியோவாக பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்தது வைரலாகியுள்ளது.