இந்த முறையும் ஐபிஎல் கோப்பை இவங்களுக்கு தான்! எப்படி தெரியுமா? மைக்கல் வாகன் கூறும் காரணம்
ஐக்கிய அரபு அமீராத்தில், ஐபிஎல் தொடருக்கான மீதி போட்டி நடைபெறவுள்ளதால், இந்த முறையும் மும்பை அணியே கோப்பையைக் கைப்பற்றும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கல் வாகன் கூறியுள்ளார்.
இந்தியாவில் இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடர், கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு, இப்போது அது ஐக்கிய அரபு அமீரகத்தில் அவரும் செப்டம்பர்-அக்டோர்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது.
இது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கல் வாகன் கூறுகையில், இந்த முறையும் ஐபிஎல் கோப்பையை வெல்ல மும்பை அணிக்கே வாய்ப்பு உள்ளது. ஐபிஎல் தொடரில் மும்பை அணி எப்பொழுதும் மிக சிறப்பாக செயல்படும். குறிப்பாக அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா மிக சிறப்பாக அந்த அணியை வழிநடத்தி பல வெற்றிகளை பெற வைத்திருக்கிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் அந்த அணி மிக சிறப்பாக செயல்பட்டு தொடர்ச்சியாக இரண்டு கோப்பைகளை வென்றுள்ளது.
இந்த ஆண்டு ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும் அதன் பின்னர் நிதானித்து தற்பொழுது நான்காவது இடத்தில் இருக்கிறது. ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.
கடந்த முறை இங்கே நடந்த போது, மும்பை அணி சிறப்பாக செயல்பட்டு கோப்பையைக் கைப்பற்றியது, அதே போன்று இந்த முறையும் அந்தணிக்கே அதிகம் வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.