கேப்டனாக தனது கடைசி டாஸில் பங்கேற்ற கோலி...! அடுத்த கேப்டன் யார் என்பதை சூசகமாக கூறிய ரன் மெஷின்
இந்திய டி20 அணியின் கேப்டனாக தனது கடைசி டாஸில் பங்கேற்ற ரன் மெஷின் என்றழைகப்படும் விராட் கோலி, அடுத்த டி20 கேப்டன் யார் என்பதை சூசகமாக வெளிப்படுத்தினார்.
நமீபியாவுக்கு எதிரான டி20 போட்டிக்கு பிறகு கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார்.
கோலிக்கு பதிலாக இந்திய டி20 அணியின் கேப்டனாக ரோகிர் சர்மா நியமிக்கப்படுவார் என தகவல்கள் கசிந்துள்ளது.
இந்நிலையில், இன்று துபாயில் நமீபியா அணிக்கு எதிரான போட்டியில், இந்திய டி20 அணி கேப்டனாக தனது கடைசி டாஸில் பங்கேற்ற கோலி, டாஸை வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
டாஸின் போது பேசிய கோலி, அடுத்த இந்திய டி20 அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவை நியமிக்க வாய்ப்பு இருப்பதாக சூசகமாக வெளிப்படுத்தினார்.
டி20 உலகக் கோப்பையில் டாஸ் ஒரு பெரிய விஷயமாக இருக்கிறது.
இந்திய அணியின் கேப்டனாக இருப்பது எனக்கு கிடைத்த கௌரவம், என்னால் முடிந்ததைச் செய்துள்ளேன்.
அணி விளையாடிய விதம் குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
இப்போது இந்த அணியை முன்னோக்கி வழிநடத்துவதற்கான அடுத்த கட்டத்திற்கான நேரம் இது என்று நினைக்கிறேன்.
ரோகித் இருக்கிறார், அவர் சிறிது காலமாக அனைத்து விஷயங்களை கவனித்து வருகிறார் என கோலி சூசகமாக கூறினார்.